karunas

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் சமுத்திரக்கனி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சங்கத்தலைவன்'. இப்படம் நாளை (26.02.2021) வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. வெற்றிமாறன், சமுத்திரக்கனி, கருணாஸ் உள்ளிட்ட திரையுலகப்பிரபலங்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நடிகர் கருணாஸ் வழக்கத்திற்கும் அதிகமான அளவு தாடி மற்றும் முடியுடன் காட்சியளித்தார். பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் 'ஏதும் கோயிலுக்கு நேர்த்திக்கடனா' என இது குறித்துக் கேள்வி எழுப்பினார்.

Advertisment

அதற்கு கருணாஸ் பதிலளிக்கையில், "பிற நடிகர்கள் இது மாதிரி இருந்தால் அடுத்தப் பட கெட்டப்பானுகேட்குறீங்க. ஆனால், என்னிடம் மட்டும் கோயிலுக்கு நேர்த்திக்கடனானு கேட்குறீங்க. நீங்கள் மட்டும் இல்லை. நிறைய பேர் இப்படித்தான் கேட்குறாங்க. உண்மையைச் சொல்லனும்னா ஒரு படத்தில் நடிப்பதற்காகத்தான் தாடி வளர்த்தேன். கரோனாவிற்குப் பிறகு சினிமா துறை என்ன சூழல்ல இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். அதனால், அந்தப்படத்தை இன்றைய சூழலில் எடுக்க முடியாது. ஒரு பத்து நாளுக்கு முன்னாலே தாடியை எடுப்பது குறித்து யோசித்தேன். உடனே வெற்றிமாறனுக்கு கால் பண்ணேன். இந்த மாதிரி கெட்டப் உங்களுக்கு பிடிக்குமே... அடுத்த படத்தில் எனக்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்றேன். அவர் யோசிச்சு சொல்றேன்னு சொன்னார். அதனால எடுக்காம இருக்கேன்" எனக் கூறினார்.

Advertisment