
நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்பு கதாநாயகனாக நடித்து இப்போது முக்கிய கதாபாத்திரங்களில் அதிக கவனம் செலுத்தி வருபவர் கருணாஸ். கடைசியாக ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘சொர்க்கவாசல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இடையே இசையமைப்பாளராகவும் பாடகராகவும் வலம் வந்தார்.
சினிமாவை தாண்டி அரசியலில் கவனம் செலுத்த தொடங்கிய அவர் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். 2016ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து திருவாடனை சட்டமன்ற தொகுதியில் நின்று ஜெயித்தார். இவர் பின்னணி பாடகி கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு பெண் மற்றும் ஆண் பிள்ளைகள் இருக்கின்றன. இதில் மகன் கென் கருணாஸ் அசுரன், விடுதலை பாகம் 2 போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த நிலையில் கருணாஸ் இன்று பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி திரை பிரபலங்கள், ரசிகர்கள், அவரது தொண்டர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கருணாஸ் தனது மனைவி மற்றும் மகனுடன் முதல்வர் ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)