Advertisment

அமரர் ஊர்தியில் திரையரங்கிற்கு வந்த கருணாஸ்

karunas came to theatre by funeral van

சிவா கிலாரி தயாரிப்பில், விமல் மற்றும் கருணாஸ் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில், உருவாகியிருக்கும் படம் ‘போகுமிடம் வெகு தூரம் இல்லை’. இப்படத்தில் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

இப்படத்தின் கதை சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதால் படத்தின் திருநெல்வேலி மற்றும் சென்னையில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் அமரர் ஊர்தி ஓட்டுநராக விமல் நடித்துள்ளார். அவருடன் பயணம் செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் கருணாஸ் நடித்துள்ளார்.

Advertisment

இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதையொட்டி சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்க்க வந்துள்ளார் கருணாஸ். அவர் அமரர் ஊர்தியில் வந்திறங்கியது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. பின்பு அவருக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் ரசிகர்கள் வரவேற்றனர்.

karunas vimal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe