
’குயின்’ என்ற பெயரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு இணையதள தொடராக வந்துகொண்டிருக்கிறது. இதையடுத்து ’தலைவி’என்ற பெயரில் ஜெ.வின். வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவரவிருக்கிறது. இதையடுத்து, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது மகள் நடிகை ராதிகா இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகின.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வரவிருகிறது. இதில், அவரது பேரன் உதயநிதிஸ்டாலின், கலைஞர் வேடத்தில் நடிக்க விருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து, ’என் காதலி சீன் போடுறா’ படத்தை இயக்கிய ராம்சிவா, ’’அரசியலில் வரலாற்றுச் சாதனை படைத்த கலைஞர் மு.கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்தப் படத்தில் கலைஞராக அவரது பேரன் உதயநிதி ஸ்டாலினை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளேன். இது குறித்து அவரிடம் நேர ஒதுக்கீடு பெற்று கட்டாயம் உதயநிதி ஸ்டாலின் மூலம் கலைஞரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கப்படும்’’என்று கூறியுள்ளார்.
