Skip to main content

'நான் தளபதி விஜய்யை அப்படி பேசியிருக்கக்கூடாது' - கருணாகரன் வருத்தம்! 

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

காமெடி நடிகர் கருணாகரனுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சர்கார் ஆடியோ வெளியீட்டு விழா சமயத்தில் ட்விட்டரில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கருணாகரன் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் குட்டிக்கதையா என கேட்டு விஜய்யை விமர்சித்தார். இதற்கு விஜய் ரசிகர்கள் சிலர் கருணாகரனை ஒருமையில் பேசி அவரை ஆந்திராவை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டனர்.

 

karunakaran

 

இதற்கு, நான் ரெட்ஹில்ஸ்காரன் ஏன் ஆந்திராவில் பிறந்தால் தவறா? நான் தமிழ்நாட்டை சேர்ந்தவனா என்ற கேள்வியை கேட்காதீர்கள். நான் எப்போதாவது சர்கார் தமிழ் தலைப்பா? என்று கேட்டேனா? என அவர் கோபமாக கேட்க விவகாரம் பெரிய பிரச்சனையாகி மாறி கமி‌ஷனரிடம் புகார் வரை சென்றதையடுத்து காவல்துறை இந்த விவகாரம் மீது நடவடிக்கை எடுத்ததால் சர்ச்சைக்குரிய ட்வீட்டுகளை விஜய் ரசிகர்கள் நீக்கினார்கள்.

 

 

இந்நிலையில் தற்போது கருணாகரன் இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்.... "நான் எப்போதும் யாரையும் வெறுப்பது இல்லை. எனக்கு ரொம்ப பிடித்த விஜய் அண்ணாவை வெறுக்கிறேன் என்று சொல்லியிருக்கக்கூடாது. அதற்கு வருத்தப்படுகிறேன். அவர் எனக்குப் பிடித்தமான நடிகர், அது அவருக்கும் தெரியும். சமூக வலைதளங்களில் நான் யாரையாவது புண்படுத்தும்படி பேசியிருந்தால் உண்மையிலேயே மன்னிப்பு  கேட்டுக்கொள்கிறேன்" என்று வருத்தம் தெரிவித்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'நாடும் நாட்டு மக்களும்’ - வெளியான ‘சூது கவ்வும் 2’ அப்டேட்

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Soodhu Kavvum 2 update

திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சூது கவ்வும்’. இதில் விஜய் சேதுபதி, அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. 

இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், அது தற்போது உறுதியாகியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ என்ற தலைப்பில் முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க, கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எம்.எஸ். அர்ஜுன் இயக்குகிறார். படப்பிடிப்பு முடியும் தறுவாயில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தில் சத்யராஜ், ராதாரவி, ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது. அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

"மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு இந்த படம் மாற்று மருந்தாக இருக்கும்" - கருணாகரன் 

Published on 31/05/2021 | Edited on 31/05/2021
bvdbzdbszd

 

வைபவ் - ராதா மோகன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'மலேசியா டு அம்னீசியா'. வாணி போஜன் நாயகியாகவும், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், மே 28 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் நடிகர் கருணாகரன் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில்...

 

"இயக்குனர் ராதா மோகன் சாருடன் பணியாற்றுவது எப்போதும் ஒரு உன்னதமான அனுபவம். 'உப்பு கருவாடு' படத்தில் என்னை நாயகனாக அறிமுகப்படுத்திய அவருக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டு இருக்கிறேன். குடும்பத்தோடு சேர்ந்து பார்த்து மகிழக் கூடிய ஜனரஞ்சகமான படைப்புகள் தருவதில் அவருக்கு நிகர் அவரே. 'மலேசியா டு அம்னீசியா' படத்தில் கூட அவரது கைவண்ணம் நிரம்பி இருக்கும். மன உளைச்சலில் இருக்கும் மக்களுக்கு இந்த படம் ஒரு பெரிய மாற்று மருந்தாக இருக்கும். இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள அற்புதமான படமாகும். வைபவ், வாணி போஜன், எம்.எஸ் பாஸ்கர், மயில் சாமி, ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய இந்த அனுபவம் மறக்க முடியாதது" என்றார்.