காமெடி நடிகர் கருணாகரனுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சர்கார் ஆடியோ வெளியீட்டு விழா சமயத்தில் ட்விட்டரில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கருணாகரன் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் குட்டிக்கதையா என கேட்டு விஜய்யை விமர்சித்தார். இதற்கு விஜய் ரசிகர்கள் சிலர் கருணாகரனை ஒருமையில் பேசி அவரை ஆந்திராவை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டனர்.

karunakaran

Advertisment

இதற்கு, நான் ரெட்ஹில்ஸ்காரன் ஏன் ஆந்திராவில் பிறந்தால் தவறா? நான் தமிழ்நாட்டை சேர்ந்தவனா என்ற கேள்வியை கேட்காதீர்கள். நான் எப்போதாவது சர்கார் தமிழ் தலைப்பா? என்று கேட்டேனா? என அவர் கோபமாக கேட்க விவகாரம் பெரிய பிரச்சனையாகி மாறி கமி‌ஷனரிடம் புகார் வரை சென்றதையடுத்து காவல்துறை இந்த விவகாரம் மீது நடவடிக்கை எடுத்ததால் சர்ச்சைக்குரிய ட்வீட்டுகளை விஜய் ரசிகர்கள் நீக்கினார்கள்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் தற்போது கருணாகரன் இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்.... "நான் எப்போதும் யாரையும் வெறுப்பது இல்லை. எனக்கு ரொம்ப பிடித்த விஜய் அண்ணாவை வெறுக்கிறேன் என்று சொல்லியிருக்கக்கூடாது. அதற்கு வருத்தப்படுகிறேன். அவர் எனக்குப் பிடித்தமான நடிகர், அது அவருக்கும் தெரியும். சமூக வலைதளங்களில் நான் யாரையாவது புண்படுத்தும்படி பேசியிருந்தால் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.