உலகம் முழுக்க கரோனா அச்சத்தால் மக்கள் பீதியில் இருக்கின்றனர். இந்நிலையில் சென்னையை சேர்ந்த மருத்துவர் சைமன் கரோனாவால் இறந்துவிட்டார். அவருடைய உடலை புதைக்கவிடாமல் ஒருசிலர் போலீஸாரிடம் பிரச்சனையில் ஈடுபட்டனர். பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் போலீஸாரின் உதவியுடன் அவரது உடல் புதைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு பலர் தங்களின் கண்டனக் குரல்களை எழுப்பினார்கள். உடலை புதைக்கவிடாமல் தடுத்த 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் கருணாகரன் இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “கல்லால் அடித்துதான் கடவுளை காண்பிக்கிறார்கள்... இன்றும்! rip DR.simon" என்று பதிவிட்டுள்ளார்.