Skip to main content

“சுசீந்திரன் நயன்தாராவையும் அரசியலுக்கு கூப்பிடுவார்...”- கரு. பழனியப்பன்

Published on 24/03/2019 | Edited on 25/03/2019

உன்னைப்போல் ஒருவன், பில்லா 2 ஆகிய திரைப்படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி மூன்றாவது படமாக நயன்தாராவை வைத்து ‘கொலையுதிர் காலம்’என்னும் திரைப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் கரு.பழனியப்பன் கலந்துகொண்டு பேசுகையில்,  “திரையுலகில் வெளிப்படையாக தொழில்நுட்பங்களை பற்றி சொல்கிறோம் என்றால் அது மிகவும் நல்லது. அதனால் வெளியிலிருந்து பலர் இந்த துறைக்கு வரக்கூடும். ஓ இது இவ்வளவு எளிமையானதா? அவ்வளவுதான் ஒளிப்பதிவா, அவ்வளவுதான் திரைக்கதையா? சினிமா எடுப்பது என்பது அவ்வளவு சிக்கல் இல்லையா? அப்படி தெரிந்தால் பல நூறு இளைஞர்கள் சினிமாவுக்குள் வரக்கூடும். அதனால் இவைகள் வெளியுலகத்துக்கு தெரிவது மிகவும் நல்லது. ஆனால், ஒரு தயாரிப்பாளருக்கும் இன்னொரு தயாரிப்பாளருக்கும், தயாரிப்பாளர் சங்கத்தில் நடப்பது வெளியில் தெரிந்தால் யாராவது சினிமாவுக்குள் வருவார்களா? 
 

karu

 

 

எனக்கு என்ன பயம் என்றால் ஸ்டார் போலரைஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அந்த மூன்று பேர்தான். ஒருவருக்கு மொழி புரியவில்லை என்றாலும் உணர்ச்சிகள் புரியும், அந்த மூன்று பேரும் ஆஹா பெரிய ரிஸ்க் எடுத்துவிட்டோம் என்பது போலவே இருக்கிறார்கள். கப்பலோட்டிய தமிழன் படத்தில் ஒரு காட்சி வரும், வெள்ளைக்காரனை எதிர்த்து வ.உ.சி தன் சொந்த செலவில் கப்பல் வாங்கிவிடுவார். பிறகு அவரை ஆங்கிலேயர்கள் சிறைப்பிடித்துவிடுவார்கள். அவர் சிறைக்கு சென்றபின், அந்த கப்பலை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து விற்றுவிடுவார்கள். சிறையில் செக்கு இழுத்து மிகவும் கஷ்டப்பட்டு, பின்னர் விடுதலையாகி வெளியே வருவார். இன்னும் கப்பல் ஓடுகிறது என்ற நினைப்பில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வருவார் வ.உ.சி. அப்போது ஒருவர் வாயை துண்டு வைத்து மூடி அழுதுக் கொண்டு இருப்பார். ஏன் அழுகிறாய் என்று வ.உ.சியாக நடிக்கும் சிவாஜி கேட்டவுடன்,  ‘இந்த பாவிகளை நம்பியா கப்பலை வாங்குனீங்க’என்று சொல்வார். அந்த மாதிரி மொழி தெரியாம வந்திருக்கிற மூன்று பேர ஆளாக்கிறுவீங்கப்போல” என்று தயாரிப்பாளர் சங்கத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி அந்த மேடையில் பேசியவர்கள் குறித்து கலகலப்பாகபேசினார்.
 

மேலும் பேசியவர், “இந்த படத்தின் மேல் இருக்கும் கவனம் நயன்தாராதான். ஆனால், அவரால் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை. வேறு ஏதோ பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு மதியழகன் அழைப்புவிடுத்தார் அதனால் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். வந்தபின்புதான் தெரிந்தது சக்ரி டோலட்டி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் என்று. அவரும் வேறு வேலை இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை என்றார்கள். நயன்தாரா இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றவுடன் ஒரு வகையில் நான் சந்தோஷப்பட்டேன். ஏன் என்றால்? நயன்தாரா வந்திருந்தால் சுசீந்திரன் நாளைக்கு நயன்தாராவையும் அரசியலுக்கு வர அழைப்புவிடுத்திருப்பார். அவர் யாருக்கு கூட்டம் கூடினாலும் அவர்களை அரசியலுக்கு வர அழைப்புவிடுகிறார்” என்றார்.
 

“இதுபோன்ற காலத்தில் தயாரிப்பாளர்கள் எல்லாம் காவலாளிகள் போல வெளியே நிற்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்தாதீர்கள். நாட்டினுடைய பிரதம மந்திரிகள் எல்லாம் காவலாளிகளான காலம் இது. ஐந்து வருடத்திற்கு முன்பு உள்ளே போகும்போது மீண்டும் உங்களிடம் வருவேன். மக்களாகிய நீங்கள்தான் எனக்கு மார்க் போடுவீர்கள், அந்த பிராக்ரஸ் ரிப்போர்ட்டு உங்களிடம்தான் உள்ளது என்றார். ஆனால், இப்போ பிராக்ரஸ் கார்டை பற்றி கேட்டால் காவலாளி என்கிறார். தயாரிப்பாளர்கள் காவலாளிகளாக இருப்பது தற்போது முக்கியமல்ல, நாட்டினுடைய காவலாளி யார் என்று முடிவு செய்யும் நேரம் இது. இங்கு நடப்பவை அனைத்தையும் மாற்றிவிடலாம். ஆனால், அவர் மாறவே மாட்டார். அங்கேயே உட்கார்ந்துக்கொள்வார். இதனால் அது மிகவும் முக்கியம்” என்று இறுதியாக தயாரிப்பாளர் சங்க பிரச்சனை பற்றியும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னணி நடிகையுடன் கூட்டணி - ஹீரோயின் சப்ஜெக்டை கையிலெடுத்த சசிகுமார்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sasikumar direct nayanthara movie

அயோத்தி பட வெற்றியைத் தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃப்ரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். 

இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

sasikumar direct nayanthara movie

நயன்தாரா தற்போது, சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Next Story

நயன்தாரா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nayanthara instagram story issue

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை இயக்கும் எல்.ஐ.சி படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து 2022ஆம் ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டார். பின்பு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று கொண்டார். இதையடுத்து அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் தொழில்முனைவோராக  களம் இறங்கினார். இதனைத் தொடர்ந்து, ஃபெமி 9 (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளை அறிமுகப்படுத்தினார். 

இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கினார். அதில் தனது படங்களின் ப்ரொமோஷன், தனது குழந்தைகளின் புகைப்படங்கள், தனது தொழில் நிறுவனத்தின் விளம்பரம் என ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் கணவர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்ஃபாலோ செய்ததாக சர்சையானது. இதனால் அவரது திருமண உறவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. 

இதையடுத்து திருமண உறவு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் ‘நான் இழந்துவிட்டேன்’ (I'm lost) என குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் பல்வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.