Skip to main content

“நம் நிலத்தை யார் பறித்தார்கள் என்பது முக்கியமில்லை”- பாஜக, அதிமுகவை கலாய்த்து தள்ளிய கரு.பழனியப்பன்

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு, மயில்சாமி, மனோபாலா சார்லி, ஆனந்த்ராஜ், ரவிமரியா, லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கூர்கா . 4 மங்கி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ராஜ் ஆர்யன் இசையமைத்துள்ளார் . இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. எஸ் பி பாலசுப்பிரமணியம், சித்தார்த், கரு.பழனியப்பன், யோகி பாபு, மயில்சாமி, மனோபாலா உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர் .
 

karu.palaniyappan

 

 

அப்போது பேசிய கரு.பழனியப்பன், “ராஜராஜன் காலம் முடிந்துவிட்டது. இருண்ட காலம் களப்பிரர் காலமா, ராஜராஜன் காலமா என்பதை வரலாற்று ஆசிரியர்கள் தீர்மானித்துவிட்டுப் போகிறார்கள். வாழும் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், தஞ்சாவூரில் மீத்தேன் என்ற ஒன்றை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதை திரும்பிப் பாருங்கள், ராஜராஜனை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நம் நிலத்தை யார் பறித்தார்கள் என்பது முக்கியமில்லை. நம் கண் முன்னால் ஒருத்தன் பறித்துக் கொண்டே இருக்கிறான். அவனை கவனிக்காமல் ராஜராஜன் பற்றிப் பேசுவது முக்கியமில்லை.
 

சித்தார்த் மற்றும் மயில்சாமி இருவரும் சமூகக் கருத்துகளை பேசிக்கொண்டே இருப்பதில் மகிழ்ச்சி. அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். அதை செய்யாதவர்கள், ஏன் இதனை பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைப்பார்கள். வரலாற்றில் 30 கோடி பேர் வாழ்ந்த இந்தியாவில் சுதந்திரத்துக்குப் போராடியவர்கள் 3 லட்சம் பேர் தான். அப்புறம் அதனை 30 கோடி பேர் அனுபவித்தார்கள். ஆகவே, கொஞ்சம் பேர் கத்திக் கொண்டிருப்பார்கள். அப்படி நாம் கத்திக் கொண்டே இருப்பது அவசியம்.
 

கடந்த 5 ஆண்டுகளாக சவுக்கிதார்கள் நம்மை மகிழ்வித்துக் கொண்டே இருந்தார்கள். அதே போல் இந்த 'கூர்கா'வும் நம்மை மகிழ்விப்பார். இன்னுமொரு 5 ஆண்டுகள் சவுக்கிதார்கள் நம்மை மகிழ்விக்கப் போகிறார்கள். இன்று காலை அனைத்து பேப்பரில், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தது தான் தலைப்புச் செய்தி. அதற்கு கீழேயே தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க அவசர ஆலோசனைக் கூட்டம் என்ற செய்தி இருந்தது. அந்தச் செய்திக்குள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொள்கிறார் என்பதும் இருந்தது. இவர்கள் எல்லாம் சவுக்கிதார்களிடம் பயிற்சி பெற்றவர்கள்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வளர்ச்சியை ஏற்படுத்துவதுதான் திமுக அரசு” - கரு.பழனியப்பன்

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

karu pazhaniyappan talk dmk govt

 

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக மாணவரணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வாழ்த்தரங்க நிகழ்வு நடைபெற்றது. கழக மாணவரணி செயலாளர் எழிலரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ. அராசா, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், பெரியாரிய சிந்தனையாளர் வே.மதிமாறன், எழுத்தாளர் சுகிர்தராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 

இந்நிகழ்வில் பேசிய மதிமாறன், “திமுக மாணவர் அணிக்கு என்று தனி சிறப்பு உள்ளது. இந்தித்திணிப்பை எதிர்ப்பவர்கள் இந்திக்காரர்களுக்கு எதிராக உள்ளோம் என்கிறார்கள். பாஜக கட்சியை எதிர்க்கும் கட்சிகள் 100 உள்ளன. தமிழ்நாடு முதல்வர் பிரதமராக வந்துவிடுவார்கள் என்கிறார்கள். அவர் வரட்டும். ஹிட்லரை வீழ்த்திய ரஷ்யாவின் ஸ்டாலின் போல், பாஜக ஆட்சியை திராவிட மாடல் கொண்டு வீழ்த்துவார் நம் தமிழ்நாடு முதல்வர். அதிமுக, திமுக எதிர்ப்பாளர்கள் அல்ல, அவர்கள் ஒரு கோமாளிகள். அன்று எமர்ஜென்ஸி இல்லாது இருந்திருந்தால் திமுக ஆட்சி காலம் காலமாக இருந்திருக்கும். ஸ்டாலின் கதையை முடிப்பேன் என்ற பன்வாரிலால், இன்று அவர் ஆட்சி வந்த பிறகு மிகச்சிறந்த ஆட்சி திமுக ஆட்சி தான் என்கிறார். காலை உணவு திட்டம் மிகவும் அருமையானது. இன்னும் 5 ஆண்டுகளில் மாணவர்கள் நன்றாக இருப்பார்கள்” எனப் பேசினார்.

 

இதையடுத்து பேசிய கரு.பழனியப்பன், “மற்ற கட்சிகள் எது பேசினாலும் திமுக பதில் சொல்லும். ஆனால், திமுக கேள்வி கேட்டால் மற்ற கட்சிகளுக்கு பதில் சொல்லத் தெரியாது. அண்ணாமலையைக் கேட்டால் கலைஞர் என்று சொல்லுகிறார். எந்தக் கட்சியை எதிர்க்கிறதோ அந்த கட்சியின் தலைவரையே தங்கள் கட்சித் தலைவர் என்று கூறுகிறது பாஜக. ஸ்டாலின் ஹீரோ ஆனது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பதவி ஏற்ற நேரம். 20 நாட்களில் கொரோனா நோயாளிகளைச் சென்று நேரில் பார்த்தது தான் அவர் சூப்பர் ஹீரோ ஆன நேரம். ஆளுநர் ரவியை சட்டசபையை விட்டு ஓட வைத்தது தான் அவர் மாஸ் ஹீரோ ஆன நாள். கல்லூரிகளில் மாணவர் தேர்தல் வைக்க வேண்டும்.

 

பண்பாடு, இலக்கியம், மருத்துவம், கீழடியில் அருமையான ஒரு அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது திராவிட மாடல் ஆட்சிக்கான சான்று. மகாபாரதத்தை நம்புகிறவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யாமல் உள்ளனர். அண்ணாவிற்கு பிறகு கலைஞருக்கு மதுரையில் நூலகம் கட்டுகிறார். கலைஞர் நடமாடும் நூலகத்தை உதயநிதி அமைக்க உள்ளார். வளர்ச்சியை ஏற்படுத்துவது தான் இந்த திமுக அரசு. ஈரோடு தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தரம் தாழ்ந்து பேசினார். அதற்கு ஸ்டாலின் பதில் சொல்லவில்லை. அவர் அதில் வெற்றி பெற்றதன் மூலம் பதில் கூறினார். எதிர்க்கட்சியாக இருந்த போதும், தற்போது முதல்வராக இருந்த போதும் ஒரு நாளும் ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசியது இல்லை. சட்டமன்றம் கட்ட மிக அருமையான இடம் உள்ளது” என்றார்.

 

 

Next Story

தமிழில் பாடகியாக அறிமுகமாகும் மஞ்சு வாரியர்

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

Manju Warrier is making her debut as a singer in Tamil

 

இந்தியாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் சந்தோஷ் சிவன். இவர் ஒளிப்பதிவு மட்டும் இல்லாமல் இயக்கம் மற்றும் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு 'இனம்' படம் வெளியானது. அதன் பிறகு காளிதாஸ் ஜெயராம் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர்களை வைத்து 'சென்டிமீட்டர்' படத்தை இயக்கி வருகிறார். மலையாளத்தில் 'ஜாக் அண்ட் ஜில்' என்ற தலைப்பில் வெளியாகவுள்ள இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'ஸ்ரீ கோகுலம் மூவிஸ்' மற்றும் 'சேவாஸ் ஃபிலிம்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

 

இந்நிலையில் மஞ்சு வாரியார் தமிழில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். 'சென்டிமீட்டர்' படத்தின் 'கிம் கிம்' பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் முதலாக தமிழில் இந்த பாடலை மஞ்சு வாரியர் பாடியுள்ளார். ஏற்கனவே மலையாளத்தில் சில பாடல்களை பாடியுள்ள மஞ்சு வாரியர் 'கிம் கிம்' பாடலின் மூலம்  தமிழில் பாடகியாக அறிமுகமாகிறார். 'கிம் கிம்' பாடலின் மலையாள லிரிக் வீடியோ ஒரு வருடத்திற்கு முன்பே வெளியானது குறிப்பிடத்தக்கது.