வனமகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கியிருக்கும் படம் கரு. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெண்கள் மற்றும் பெண்மையின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி இருக்கிறது. இதில் ஆர்.ஜே.பாலாஜி, சந்தான பாரதி, ரேகா, நிழல்கள் ரவி, ஸ்டன்ட் சில்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை நாளை வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.