Advertisment

ஐரோப்பா, ஹைதராபாத், மும்பை, இமயமலை... கார்த்தியின் டூர் பிளான் எதற்காக?

karthi

தீரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி சங்கர் மற்றும் அர்த்தனா நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில் கார்த்தி தற்போது பிரமாண்டமாக உருவாகும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இதன் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. ரஜத் ரவிசங்கர் டைரக்டராக அறிமுகமாகும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும் நவரச நாயகன் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கார்த்தியின் 17வது படமாக உருவாகும் இந்த படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மண்குமார் தயாரிக்கிறார். பயணத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 8ஆம் தேதி சென்னையில் ஆரம்பமாகி தொடர்ந்து ஐரோப்பாவில் 15 நாட்களும், ஹைதராபாத், மும்பை, இமயமலை பகுதிகளிலும் படமாக்கப்படவுள்ளது.

Advertisment
rakulpreet karthi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe