கடைக்குட்டி சிங்கத்தின் அடுத்த அடி...

karthi

"கடைக்குட்டி சிங்கம்" திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்து பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் படம் "தேவ்". இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் பல அழகிய இடங்களில் வைத்து அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கவுள்ளார். பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் S. லக்ஷ்மன் 55 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. ஆக்சன் , காமெடி , அட்வென்ஜர் கலந்து உருவாகும் இப்படத்தின் அடுத்தகட்டப்படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்க உள்ளது.

இதில் கார்த்தியின் ஸ்டைலிஷான லுக் மற்றும் மாஸான தோற்றம் படத்தில் புதுமையான ஒரு விஷயமாக இருக்கும். மேலும் நாயகியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆகியோருடன் நடிகர் கார்த்திக் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் வைத்து நடைபெறவுள்ளது. விறுவிறுப்பான கார் சேசிங் மற்றும் பாடல் காட்சிகள் உட்பட அதிரடி சண்டை காட்சிகள் இமாலய மலைகளிலும், மும்பை மற்றும் ஐரோப்பாவிலும் படமாக்கப்படவுள்ளன. மேலும் அமெரிக்காவிலும் இப்படம் படமாக்கப்படவுள்ளது.

karthi kadaikuttysingam
இதையும் படியுங்கள்
Subscribe