Advertisment

கார்த்தி படத்திற்கு எதிராக போராட்டம்... படக்குழு கடும் கண்டனம்...

நடிகர் கார்த்தி கைதி படத்தில் நடித்து முடித்தவுடன் ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். கார்த்தியின் 19வது படமான இதற்கு பெயர் சுல்தான் என்று படக்குழு வைத்துள்ளது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது.

Advertisment

sss

இந்நிலையில் இந்த படம் திப்பு சுல்தான் வரலாற்றை சொல்லும் படமாக உருவாகிறது. இதனால் திண்டுக்கல் மலைக்கோட்டையில் இப்படத்தை எடுக்க கூடாது என்று ஒரு அமைப்பு கடந்த 24ஆம் தேதி படபிடிப்பு நடக்கும் தளத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் அந்த அமைப்பின் கருத்தால் இரண்டு தரப்பினர்களுக்கே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனால் இந்த பிரச்சனை குறித்து விளக்கமளித்துள்ளது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில், “இந்த படம் திப்பு சுல்தான் கதை பின்னணியை கொண்டு உருவாகும் படமோ அல்லது திப்பு சுல்தான் வரலாற்றை சொல்லும் படமோ இல்லை” என்று தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “சமீப காலங்களாக சுய விளம்பரம் நோக்கில் திரைப்படங்களை தனி நபர்களும், சில அமைப்புகளூம் தாக்குவது அதிகரித்து வருகிறது. ஒரு திரைப்படம் எதை காண்பிக்க கூடாதென்பதை உறுதி செய்ய தணிக்கைகுழு உள்ளது. இது தவிர்த்து என்ன காண்பிக்க வேண்டும் என்பதை முடிவும் செய்யும் அந்த திரைப்படத்தின் படைப்பாளிக்கே உள்ளது. இது நம் நாட்டின் சட்டம் நமக்கு அளிக்கும் சுதந்திரமும், பாதுகாப்பும் ஆகும். ஆகவே எந்தவொரு அமைப்போ, தனி நபரோ படைப்பாளிகளின் சுதந்திரத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் வரலாற்று தலைவர்களுக்கும், தேசிய தலைவர்களுக்கும் சாதி மத அடையாளங்கள் பூசி அவர்களின் வாழ்வையும் நமது வரலாற்றையும் கொச்சைபடுத்தும் செயல்களுக்கும் எங்களின் கண்டனத்தை பதிவு செய்துகொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

rashmika mandana rashmika karthi Karthi19
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe