Advertisment

'என் ஸ்கிரிப்ட்டை ஜெயம் ரவி தான் மாற்ற வலியுறுத்தினார்' - 'அடங்க மறு' கார்த்திக் தங்கவேல் 

adanga maru

'அடங்க மறு' படத்தை நாளை டிசம்பர் 21ஆம் தேதி க்ளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் உலகெங்கும் வெளியிடுகிறது. ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா நடித்திருக்கும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங்கை கையாள, சாம் சிஎஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தை கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ளார். மேலும் இப்படம் குறித்து அவர் பேசும்போது....

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

"சுஜாதா மேடம் ஆரம்ப நிலையிலிருந்து எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தவர். அவரின் எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்திருக்கிறேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் குழு மற்றும் அடங்க மறு படத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நண்பர்கள் இது ஒரு சரியான பொழுதுபோக்கு படம் என கூறுவதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த விஷயத்தில், எல்லா பாராட்டும் ஜெயம் ரவி சாருக்கே செல்ல வேண்டும். ஆரம்பத்தில், என் ஸ்கிரிப்ட் மிகவும் சீரியஸான ஸ்கிரிப்டாக இருந்தது, அதை அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் விதத்தில் மாற்ற அவர் தான் தொடர்ந்து வலியுறுத்தினார். அவருக்கு நிறைய கதைகள் காத்திருந்தன, அவர் நினைத்திருந்தால் இந்த ஸ்கிரிப்ட்டை எளிதில் புறக்கணித்திருக்கலாம். ஆனால் அவர் என் கருத்துகளை ஏற்றுக் கொண்டதோடு, எனக்கு உறுதுணையாக இருந்தார் என்பது நான் அவரிடம் வியந்த விஷயம். இது தான் ஒரு நல்ல படமாக மாற முக்கிய காரணமாகவும் இருந்தது. மேலும், இந்த படத்துக்காக ஒவ்வொரு நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் நம்பமுடியாத முயற்சியை மேற்கொண்டனர். அப்படிப்பட்ட நடிகர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் நான் பெற்றது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்" என்றார்.

adangamaru
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe