ADVERTISEMENT

‘ஜகமே தந்திரம்’ எனது கனவு திரைப்படம்..! - கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி!

12:57 PM Jun 01, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து, படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவெடுத்தது. இதனையடுத்து, ‘ஜகமே தந்திரம்’ படம் வருகிற ஜூன் 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து தமிழில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உட்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகிவரும் நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இப்படம் குறித்து பேசியுள்ளார். அதில்...

"‘ஜகமே தந்திரம்’ எனது கனவு திரைப்படம். என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். மிக விறுவிறுப்பான வகையில், உலகில் தற்போது நடைமுறையில் இருக்கும் மிகமுக்கியமான பிரச்சினையை உள்ளூரில் இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை வைத்து மிக சுவாரஸ்யமாகவும், கொண்டாட்டத்துடனும் உருவாக்கப்பட்ட திரைப்படம். ரசிகர்கள் தனுஷ் அவர்களின் அட்டகாசமான திறமையை, 190 நாடுகளில் உள்ள ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் வழியே கொண்டாடலாம். ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலைன்ஸ் என்டெர்டைன்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் உலகளவில் 2021 ஜூன் 18 அன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது" என கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT