பேரறிவாளன் தாய்க்கு ஆதரவளித்த கார்த்திக் சுப்புராஜ்!

bdbxbxfbnx

ராஜிவ் காந்தி கொலைவழக்கில் கைதாகி, சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு இன்றுடன் தண்டனைக்காலம் 31 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு அவரது தாயார் அற்புதம்மாள் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "தொடர் ஓட்டம், வரலாற்றில் இல்லா போராட்டம்எனப் பலரும் எனை சுட்டி பேசும்போது, மூப்படைந்த என் ரத்த ஓட்டமும் தேய்ந்துபோன என் எலும்புகளும் உயிர்வலியுடன் வேகமெடுக்கும்.

இப்போராட்டத்தின் முடிவு நீதியின் வெற்றியாக வேண்டும் என ஒற்றை இலக்கே காரணம். #31YearsOfInjustice" என கூறியுள்ளார். இதற்குப் பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார். அதில்... "இந்த தாயின் 31 ஆண்டுகால போராட்டத்திற்கு நீதி வழங்கப்படுவதற்கான அதிகமான நேரம் இது!!" என கூறியுள்ளார்.

karthik subbaraj
இதையும் படியுங்கள்
Subscribe