Skip to main content

“நாலரை வருஷம் ரொம்ப மன அழுத்தமா இருந்துச்சு...” - மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

karthik subbaraj speech at jigarthanda double s thanks meet

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி வெளியான படம்  'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. 2014 ஆம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் ரஜினி, படக்குழுவை பாராட்டி அறிக்கை வெளியிட்டார். மேலும் நேரில் அழைத்து பாராட்டினார். இவரை தவிர்த்து ஷங்கர், சிம்பு, மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்தனர். 

 

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர். அப்போது மேடையில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், “என்னுடைய படம் தியேட்டருக்கு வந்து நாலரை வருஷம் ஆச்சு. அந்த இடைவெளி, ரொம்ப மன அழுத்தமா இருந்துச்சு. பேட்ட ரிலீஸாகி முடியும்போது, நம்ம படத்தை இனி தியேட்டர்ல பார்ப்போமான்னு நினச்சு கூட பார்க்கல. அந்தளவுக்கு டார்ச்சர் வரும்னு நினைக்கல. அந்த விஷயங்கள் ஹர்ட் பன்னிக்கிட்டே இருந்துச்சு. ஆனால் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தியேட்டருக்கு வரும்போது, இதுதான் நம்ம தியேட்டருக்கு வர சரியான கம் பேக் படமாக இருக்குமென நினைச்சேன். பீட்சா படம் வெளியாகும்போது என்ன ஃபீல் இருந்துச்சோ அது மாதிரி தான் இந்த படத்திற்கும் இருந்துச்சு. 

 

அதற்கு இண்டஸ்டிரியில் நிறைய பேர் சப்போர்ட் பண்ணாங்க. படம் ரிலீஸன்று அனிருத் ட்வீட் பண்ணார். குறிப்பாக தனுஷ் சார், படம் பார்த்து படம் ரிலீஸாவதற்கு முந்தன நாள் சூப்பராக இருக்கு என போஸ்ட் போட்டார். எனக்கு போன் பண்ணியும் வாழ்த்தினார். இதேபோல் நிறைய பிரபலங்கள் வாழ்த்து சொன்னார்கள். அதுவும் ரஜினி சார். இதுவரைக்கும் என்னுடைய எல்லா படத்தையும் பார்த்து பாராட்டியிருக்கார். நான் வெறும் அவருடைய ரசிகன் என்பதற்காக மட்டும் பாராட்டுகிற ஆள் அவர் கிடையாது. அந்தந்த படங்களுடைய விஷயங்கள் புரிஞ்சு, அவருக்கு புடிச்சிருச்சுனா உடனே பாராட்டி விடுவார். மெர்க்குரி படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை பார்த்து பாராட்டின ஒரே ஆள் ரஜினிதான். இந்த படத்திற்கு 1 மணி நேரம் எங்களுடன் அவர் பேசியது, என் வாழ்க்கையில் மறக்க முடியாது” என்றார்.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மத நல்லிணக்கம்; உண்மைச் சம்பவம்” - கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
karthik subburaj praised aishwarya rajinikanth lal salaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டின் போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என ரஜினி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இன்று (09.02.2024) இப்படம் வெளியாகியுள்ளது. படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, “என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்” எனக் குறிப்பிட்டு ரஜினி அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனிடையே ரஜினி ரசிகர்கள் வழக்கம் போல் திரையரங்கு முன்பு கூடி பட்டாசு வெடித்து, மேள தாளத்துடன் படத்தை வரவேற்றனர். மேலும் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடினர். 

இப்படத்தை தற்போது கார்த்திக் சுப்புராஜ் பாராடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தலைவர் ரஜினிகாந்தை மொய்தீன் பாய்யாக பார்ப்பது சூப்பராக இருந்தது. நம்மிடையே மத நல்லிணக்கத்தின் அவசியத்தை உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் படக்குழு சொல்லியிருக்கிறார்கள். அதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள்” எனk குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“விஜயகாந்தின் அந்த ஒரு வார்த்தை எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்” - கார்த்திக் சுப்புராஜ்

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
karthik subburaj about vijayakanth

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

இந்த நிலையில், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத பல திரைப் பிரபலங்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, விஜயகாந்த்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் படம் எடுப்பதற்கு முன்னாடி குறும்படம் எடுத்திட்டிருந்த டைம், அவருடைய டிவியில் ஒரு குறும்பட போட்டிக்காக அனுப்பியிருந்தேன். அப்போதுதான் அவரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய படம் பார்த்துவிட்டு கண்டிப்பா நீ படம் பண்ணிடுவப்பா... என்று சொன்னார். அந்த ஒரு வார்த்தை எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது. அதன் பிறகு அவருடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. மதுரையிலிருந்து வந்து இவ்ளோ பெரிய லெஜண்டா வந்திருக்காரு. அவருடைய இழப்பு சினிமா துறைக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு” என்றார்.