Skip to main content

டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியில் வெளிவரும் கார்த்திக் சுப்புராஜின் சீரிஸ்...

triples

 

 

நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஒ.டி.டி. தளங்கள், முன்பே பல சீரிஸ்களை தயாரித்து வெளியிட்டிருந்தாலும், கரோனா ஊரடங்கில், திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் அது இன்னும் அதிகரித்திருக்கிறது. கரோனா காலகட்டத்தில் திரைப்பட படப்பிடிப்பில் ஏற்படும் சிக்கல்களால், முன்னணி நடிகர்கள் முதல் முன்னணி இயக்குனர்கள் வரை தங்கள் பார்வையை, ஒ.டி.டி தளங்களுக்கு, சீரிஸ் மற்றும் அந்தாலஜி எடுப்பதில் திருப்பியிருக்கிறார்கள். அவர்களில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் ஒருவர்.

 

கார்த்திக் சுப்புராஜ், ஏற்கனவே புத்தம் புது காலை அந்தாலஜியில் ஒரு பாகத்தை இயக்கியுள்ளார். அடுத்ததாக, நெட்ஃப்ளிக்ஸ்காக நவரசா அந்தாலஜியை இயக்கவுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த பென்குயின் படம், அமேசான் ப்ரைமில் வெளியானது.

 

இந்தநிலையில் கார்த்திக் சுப்புராஜ், டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்காக 'ட்ரிபுள்ஸ்' என்ற நகைச்சுவை சீரிஸை தயாரித்துள்ளார். ஜெய், வாணி போஜன், விவேக் பிரசன்னா ஆகியோர் ‘ட்ரிபுள்ஸ்' நடித்துள்ளனர். இந்த சீரிஸின் ட்ரைலர், தற்போது வெளியாகிவுள்ளது. மேலும், இந்த சீரிஸ், டிசம்பர் 11 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ‘ட்ரிபிள்ஸ்' சீரிஸ், தமிழ், இந்தி  உள்ளிட்ட 7 மொழிகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்