"தலைவர் ஓகே-னா நானும் ரெடி" - கார்த்திக் சுப்புராஜ்

karthik subbaraj ready to join with rajini for a movie

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளியான 'மகான்' படத்தை இயக்கியிருந்தார். நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இதனைத்தொடர்ந்து ராம்சரணைவைத்து ஷங்கர் இயக்கும் 'ஆர்.சி 15' படத்தின்கதையை எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் அடுத்து ரஜினியுடன் இணைவது குறித்து மனம் திறந்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியது, "நான் இப்போது 'ஜிகர்தண்டா 2' படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். இந்தப் படம் முடித்த பிறகு ஒரு ஸ்க்ரிப்ட் சொல்லி, தலைவருக்கு ஓகே-னா நானும் ரெடி தான். ஆனால், அதற்கு முதலில் கதை ரெடி பண்ணனும். தலைவர் ஓகே சொல்லணும். பாப்போம்" என்றார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'பேட்ட' படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. கார்த்திக் சுப்புராஜ் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பதால் இப்படத்தை ஒரு ஃபேன் பாய் இயக்குநராக கூடுதல் கவனம் செலுத்தி இயக்கியிருந்தார். இந்தச் சூழலில் மீண்டும் அந்த ஃபேன் பாய் இயக்குநர் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

Actor Rajinikanth karthik subbaraj
இதையும் படியுங்கள்
Subscribe