/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/298_2.jpg)
மாதவன் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான படம் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு'. இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் சூர்யா (தமிழில்) சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தமிழ், இந்தி மற்றும் ஆங்கில மொழியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, திரை பிரபலம் ரஜினிகாந்த் உள்ளிட்ட ரசிகர்கள் பலரும் படத்தை பார்த்து பாராட்டியிருந்தனர்.
இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "வாவ்...மிகவும் அருமை. முழு மனதுடன் இப்படத்தை எடுத்ததற்காக இயக்குநர் மற்றும் நடிகர் மாதவன் சாருக்கு ஹாட்ஸ் ஆஃப். இப்படம் அனைத்து உண்மையான தேசபக்தர்களுக்கும் சமர்ப்பணம். சிம்ரன் அவர்கள் சூப்பர் மற்றும் நம்பி நாராயணன் அவர்களுக்கு பெரிய சல்யூட். இப்படத்தில் சூர்யா சார் கடைசியில் சொல்வது போல் எங்களை மன்னித்துவிடுங்கள்" என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜின் பதிவை மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கார்த்தி சுப்புராஜிற்கு நன்றி கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)