Advertisment

"இது செயல்படுத்தப்பட்டால் பேச்சு சுதந்திரத்திற்கு ஒரு பெரிய அடியாக அமையும்" -  கார்த்திக் சுப்புராஜ் கட்டம்!

ghsfhdsfbsdf

Advertisment

திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்ட வரைவு 2021 மசோதாவை கடந்த ஜூன் 18ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இந்த மசோதாவுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். மேலும் சுமார் 1400 கலைஞர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார்கள். மேலும் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளத்தில் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் (இன்று) ஜூலை 2ஆம் தேதி ஒளிபரப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக கருத்துகளைப் பதிவு செய்யக் கடைசி நாளாகும்.

இதனால் கமல்ஹாசனை தொடர்ந்து தற்போது பல்வேறு திரை பிரபலங்களும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒளிபரப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக ட்வீட் செய்துள்ளார். அதில்... "ஒளிப்பதிவு சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம் செயல்படுத்தப்பட்டால் கலை துறையில் பேச்சு சுதந்திரத்திற்கு ஒரு பெரிய அடியாக அமையும். கருத்துச் சுதந்திரத்திற்காக நாம் நிற்கிறோம் என்பதை காட்ட தயவுசெய்து உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

karthik subbaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe