Advertisment

அடுத்த படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த கார்த்திக் நரேன்

Karthik Narain completed the shooting of his next film

கார்த்திக் நரேன், தான் இயக்கிய முதல் படத்திலே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'மாறன்' படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதை அடுத்து 'நிறங்கள் மூன்று' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அதர்வா, சரத்குமார் மற்றும் ரகுமான் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'ஐங்கரன் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Advertisment

இந்நிலையில் 'நிறங்கள் மூன்று' படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. இதனை கார்த்திக் நரேன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்தான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இப்படம் ஹைப்பர்லிங்க் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.

Advertisment

sarathkumar actor rahman karthick naren
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe