karthik kumar suchithra audio issue National Schedule Commissioner takes Action

பிரபல வானொலி தொகுப்பாளினியாகவும் பிண்ணனி பாடகியாகவும் வலம் வந்தவர் சுசித்ரா. இவர் துணை நடிகர் கார்த்திக் குமாரை 2005ஆம் ஆண்டு, திருமணம் செய்துக் கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2017ஆம் ஆண்டு பிரிந்தார். அதே ஆண்டு இவரது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் கோலிவுட் நடிகர்களின் பார்டி செய்யும் புகைப்படங்கள் வெளியானது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்பு அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சுசித்ரா தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து அவ்வப்போது நேர்காணலில் பல்வேறு அதிர்சிக்குள்ளான தகவல்களை பகிர்ந்து வந்திருந்தார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது முன்னாள் கணவர் கார்த்திக் ஒரு ஒரினச்சேர்க்கையாளர் எனக் கூறியிருந்தார். இது பரபரப்பை உண்டாக்க, தான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் அதை சொல்வதில் எந்தத்தயக்கமும் படமாட்டேன் எனக் கார்த்திக் குமார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கர்த்திக் குமார் சுசித்ராவிடம் பேசும் ஒரு ஆடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. அதில், "நீ அசிங்கமாக பேசுற, இதெல்லாம் படிச்சவங்க பேசுற பேச்சு இல்ல. படிக்காத பட்டியலின பொண்ணுபேசுற பேச்சு” என இடம்பெற்றிருந்தது. இந்த ஆடியோவும் பரவலாக பகிரப்பட்டு, கடும் விமர்சனங்களை உண்டாக்கியது. பலரும் கார்த்திக்கின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Advertisment

இதையடுத்து அந்த ஆடியோ தான் பேசியதில்லை எனக் கார்த்திக்தெரிவித்திருந்தார். மேலும் “நான் இப்படி பேசவில்லை. அது என்னுடைய குரலும் இல்லை. இது போன்ற வார்த்தைகளை பேசுபவன் நான் இல்லை” என்றும் அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் புதுக்கோட்டையை தலமையிடமாக இயங்கும் அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தார். பின்பு தேசிய பட்டியலின ஆணை இயக்குநர் ரவிவர்மன் உடனடியாக நடவடிக்கை எடுத்து சைபர் கிரைம் ஏ.டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.