simbu

கடந்த 2010ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியாகி செம ஹிட் அடித்த படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இந்தப் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் முதன் முறையாக கெளதமுடன் இணைந்து பணியாற்றினார். படத்தின் முழு ஆல்பமும் எவர்கிரீன் ஹிட்டானது. படமும் இளைஞர்கள் கொண்டாடும் க்ளாஸிக் படங்களின் வரிசையில் இணைந்தது.

Advertisment

Advertisment

சமீபத்தில்தான் இந்தப் படத்தின் பத்து ஆண்டுகளை, இளைஞர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி மகிழ்ந்த நிலையில் வி.டி.வி. ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பைக் கிளப்ப, இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென வி.டி.வி. படத்தின் தொடர்ச்சியாக 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படம் ரிலீஸானது. 12 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தக் குறும்படம் முழுக்க ஒரு தொலைபேசி உரையாடலாக இருக்கிறது. மேலும், ரஹ்மானின் மியூசிக் அந்த வி.டி.வி. மேஜிக்கை இப்போதும் தந்திருகிறது. இந்த வீடியோ இதுவரை 5 மில்லியன் கடந்து பார்வையாளர்களைக் கொண்டாட வைத்திருக்கிறது. மேலும், இதைத் தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் எடுக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றது என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கௌதம் மேனன் சமூக வலைத்தளத்தில், எவ்வாறு சூர்யாவுக்கு கதையை விவரித்து, குறும்படத்தை இயக்கினார் என்ற மேக்கிங் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.