/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ku.jpg)
உதயநிதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இதையடுத்து அட்லியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய எனாக் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக 'மேயாத மான்' படத்தில் நடித்த ப்ரியா பவானி சங்கர், இந்துஜா ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் 'இரும்புத்திரை' படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படதிலும் நடிக்கிறார்.இந்நிலையில் முன்னதாக நடிக்கும் எனாக் இயக்கும் படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'அனேகன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த கார்த்திக் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, அவரது மகன் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து 'மிஸ்டர்.சந்திரமௌலி' படத்தில் நடித்து வருகிறார். மேலும் கார்த்தியின் 17வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)