Advertisment

"நான் ரஜினி சாரை வைச்சு ஒரு படம் பண்ணுவேன்னு, அவர் முன்கூட்டியே சொல்லிட்டார்" - கார்த்திக் சுப்பராஜ்

karthick subburaj

ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 'பேட்ட'படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது விழாவில் கார்த்திக் சுப்புராஜ் கலந்துகொண்டு பேசும்போது....

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

"எனக்கு சினிமா மேல் ஒரு ஆசை, வெறி வந்ததற்கு தலைவர் தான் காரணம். நான் என்ன எழுதினாலும், உங்களை நினைத்து தான் சார் எழுதுவேன் என்று தலைவரிடம் சொன்னேன். அப்போ என்கிட்டையே சொல்லியிருக்கலாமே என்றார் ரஜினி சார். அடுத்ததாக அவரை சந்திக்கும் போது ஏதாவது கதை இருந்தால் சொல்ல சொன்னார். பின்னர் சில மாதங்கள் கழித்து அவரிடம் கதை சொன்னேன். படப்பிடிப்பில் இயக்குநரான எனக்கு நிறைய வேலைகள் இருக்கும். இருந்தாலும், தலைவர் என்ன செய்கிறார் என்பதை பார்த்து ரசித்துக் கொண்டே இருப்பேன். பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் தான். இந்த கதை பண்ணால் நான் மட்டும் தான பண்ண முடியும். கண்டிப்பாக பண்ணுவோம் என்றார் ரஜினி சார். பாபியும், நானும் பெரிய தலைவர் ரசிகர்கள். பேட்ட படத்தில் பாபியோட கதாபாத்திரத்தை அவரே தேர்வு செய்துவிட்டார். ரஜினி சாரை வைச்சு நான் ஒரு படம் பண்ணுவேன்னும், அதில் நான் வில்லனாக நடிப்பேன் என்றும் விஜய் சேதுபதி முன்கூட்டியே சொன்னார். அது தற்போது நிறைவேறிவிட்டது" என்றார்.

petta sunpictures karthicksubburaj rajini rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe