karthick subbaraj

ஓடிடி பிளாட்ஃபார்ம்கள் வளர்ச்சியடைந்த பின்னர் அந்தாலஜி திரைப்படங்களில் வருகை அதிகரித்துள்ளது. அந்தாலஜி என்றால் ஒரேதிரைப்படத்தில் நான்கு கதைகள் அல்லது அதற்கு மேற்பட்ட கதைகளை வரும். அந்த ஒவ்வொரு கதைகளையும் வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கி ஒரு முழு நீள படமாக வெளியிடுவது அந்தாலஜி ஆகும்.

Advertisment

இந்நிலையில் அமேசான் நிறுவனத்திற்கு ஐந்து பிரபலங்கள் ஐந்து வெவ்வேறு விதமாக கதைகளை உள்ளடக்கி படமாக வெளியிட திட்டமிட்டிருப்பதாக சொல்லப்பட்டது. ‘புத்தம் புது காலை’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சுதா கொங்காரா, கௌதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், ராஜிவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் இயக்குகின்றனர்.

Advertisment

அக்டோபர் 16ஆம் தேதி வெளியிடப்படும் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். காளிதாஸ் ஜெயராம், ஜெயராம், ஆண்ட்ரியா, ஸ்ருதி ஹாசன், அனு ஹாசன், சுஹாசினி, எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜின் தொகுப்பிற்கு மிராக்கிள் என்று பெயரிடப்பட்டுள்ளது. தன் வாழ்க்கையில் நடைபெற்ற மிராக்கிள் குறித்தும் அவர்தெரிவித்துள்ளார். அதில், “நான் இயக்குனர் ஆனதே பெரிய மிராக்கிள் தான். நான் படம் இயக்குவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் பேட்ட படத்திற்காக ரஜினி சாரை சந்தித்ததும், அவரை வைத்து படம் இயக்கியதுதான் என் வாழ்க்கையில் நடந்த பெரிய மிராக்கிள்” என்றார்.