கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இரண்டு வருடங்களாக ரிலீஸாகாமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் வெளிவராமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதமும் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், வழக்கம்போல் கடைசி நேரத்தில் ரிலீஸ் இல்லை என்று அறிவிப்பு வந்தது.

Advertisment

karthick naren

இதேபோல கௌதம் மேனன் இயக்கத்தில் முக்கால்வாசி முடிந்த படம் துருவ நட்சத்திரம் ரிலீஸாகுமா என்ற நிலை உருவானது. இந்நிலையில் இவ்விரண்டு படங்களின் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுவிட்டது என்று ஜிவிஎம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆம், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை வெல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது. மேலும் அதே புரொடக்‌ஷனில் வருண் என்பவரை ஹீரோவாக வைத்து ஜோஷுவா என்கிற படத்தை உருவாகியிருக்கிறார் கௌதம் இந்த படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். கடைசியாக எனக்கு மிகவும் மனதிற்கு நெருங்கிய படம் துருவ நட்சத்திரம் இதுவும் மூன்று மாதங்களில் கண்டிப்பாக வெளியாகும், அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவிட்டேன் என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் கவுதம்.

இந்நிலையில் துருவநட்சத்திரம் குறித்து பதிவிட்ட ட்வீட்டில் கார்த்திக் நரேன் கௌதம் சார் இதுக்கும் ஒரு வழி சொல்லுங்க, என்னுடைய நரகாசூரன் படத்தையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும், அந்த படமும் எனக்கு மிக மிக நெருக்கமான படம் என்று பதிவிட்டுள்ளார் கார்த்திக் நரேன்.

Advertisment

alt="miga miga avasaram" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="601ae7c1-6c0f-4fbe-b8d5-fa97e72bf290" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300-02_2.jpg" />

கௌதம் மேனன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் நரகாசூரன். இந்த படத்தின் மொத்த படபிடிப்பும் முடிவடைந்துவிட்டது. ஆனால், இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்காமன பிரச்சனையில் இந்த படமும் வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.