Skip to main content

“உங்களுக்கும் ஜிவிஎம்க்கும் என்னதான் பிரச்சனை?”- பதிலளித்த கார்த்திக் நரேன்

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய பின்னர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் நரகாசுரன் என்றொரு படத்தை இயக்கியிருந்தார். ஆனால், அந்த படம் ரிலீஸாவதில் பல சிக்கல்கள் இருப்பதால் தற்போதுவரை ரிலீஸாகாமல் உள்ளது. இதனையடுத்து அருண்விஜய் மற்றும் பிரசன்னாவை வைத்து மாஃபியா என்றொரு படத்தை இயக்கியுள்ளார். இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற ஃபிப்ரவரி 21ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. 
 

karthick naren

 

 

இதனிடையே நமக்கு மாஃபியா படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவரிடம் நரகாசுரன், மாஃபியா படங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும் உங்களுக்கும் ஜிவிஎம்க்கும் என்னதான் பிரச்சனை என்று கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த கார்த்திக் நரேன், “அந்த ப்ராஜெக்ட் தற்போது பாஸிட்டிவ்வாக நிறைய விஷயங்கள் நடந்துக்கொண்டிருக்கிறது. தற்போது நான் அந்த படம் குறித்து நிறைய பேசவும் விரும்பவில்லை. ஒரு திரைப்படமாக அப்படம் ரெடியாக இருக்கிறது. அதில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களாக இருக்கட்டும், நடித்த நடிகர்களாக இருக்கட்டும் அரவிந்த் சாமி சார் போன்ற அனைவருக்கும் அந்த படத்தின் மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறது. மாஃபியா ரிலீஸான பின்பு அந்த படம் ரிலீஸாகும் என நம்புகிறோம். 

எதைபற்றி நான் அப்டேட் செய்தாலும் அந்த படம் குறித்து கேட்பார்கள். அது சில நேரங்களில் வருத்தத்தை தந்தாலும், சில நேரங்களில் மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. மக்கள் அந்த படத்தை பற்றி இன்னும் கேட்கும்போது யாரும் மறக்கவில்லை என்று நினைக்கையில் சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.

அதேபோல நாடகமேடை படம் குறித்து கேட்டதற்கு பதிலளிக்கையில், “ அது எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு படம். 12ஆம் வகுப்பு படிக்கும் பையனுக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே நடப்பதை வைத்து உருவாக்கப்பட்டது. அதனால் என்னுடைய சுய பாதிப்பு படத்தில் அதிகமாக இருக்கும்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் நடிப்பில் ரீ மேக்காகும் அஜித் படம்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

ajith yennai arindhal hindi remake with salman khan

 

கெளதம் மேனன் - அஜித் கூட்டணியில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் 'என்னை அறிந்தால்'. ஏ.எம். ரத்னம் தயாரித்திருந்த இப்படத்தில் த்ரிஷா, அருண் விஜய், அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

 

இந்த நிலையில் இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியிலும் கௌதம் மேனனே இயக்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

 

இதற்கு முன்னதாக அஜித் நடித்த வீரம் படத்தை ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ என்ற தலைப்பில் இந்தியில் ரீமேக் செய்தார் சல்மான் கான். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் சல்மான்கான் ரசிகர்களைத் திருப்திப்படுத்தியது. வசூலிலும் நல்ல வரவேற்பு பெற்றதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. 

 

கௌதம் மேனன், இதற்கு முன்னதாக அவர் இயக்கிய மின்னலே, விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களை இந்தியில் ரிமேக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

Next Story

"கார்த்திக் நரேன் சொன்ன அந்த வார்த்தை எல்லா தயக்கத்தையும் உடைத்தது" - இளம் நடிகர் பிரகாஷ் ராகவன் பேட்டி 

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

Prakash Raghavan

 

துருவங்கள் பதினாறு படத்தில் கௌதம் கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் பிரபலமடைந்த பிரகாஷ் ராகவன்,  அண்மையில் வெளியான குருதி ஆட்டம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நக்கீரன் ஸ்டூடியோவுடனான சந்திப்பில் தன்னுடைய திரையுலகப் பயணம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

”எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வருகிறோம் எனும் போது நிறைய கடின உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கும். யார் எப்போது கூகுள் செய்து பார்த்தாலும் அவர்களுக்கு தெரிந்த படமாக என்னுடைய முதல் படம் இருக்க வேண்டும் என்று கவனமாக இருந்தேன். சினிமாவில் வாய்ப்பு தேடிய காலங்களில் நான் நினைத்துக்கொண்டதும் அதுதான். அதேபோல நான் நடித்த முதல் படமான துருவங்கள் பதினாறு எனக்கு நல்ல அடையாளத்தையும் கொடுத்தது. 

 

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடுவது என்பது சாதாரண விஷயமில்லை. ஒரு படம் பற்றி கேள்விப்பட்டு அந்த இயக்குநரின் ஆபிஸ் தேடிச் சென்றால் அந்தப் படம் முடியும் நிலையில் இருக்கும், சில நேரங்களில் முடிந்தும் கூட இருக்கும். காஸ்டிங் டைரக்டர் என்ற விஷயம் இப்போது தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாக ஆரம்பித்துள்ளது. நான் 2013ஆம் ஆண்டிலிருந்தே வாய்ப்புத் தேட ஆரம்பித்துவிட்டதால் ஒவ்வொரு ஆபிஸாக தேடிப்போவேன். ஷாட் ஃபிலிம்களை தேடித்தேடி பார்த்து அதை இயக்கியவர்களுடன் ஃபேஸ்புக்கில் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வேன். அப்படித்தான் ஸ்ரீ கணேஷ், மடோன் அஸ்வின் தொடர்பு கிடைத்தது.

 

ஓகே கண்மனி படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக வருவேன். அப்போது மணிரத்னம் சாருடன் எடுத்த போட்டோவை பார்த்துதான் துருவங்கள் பதினாறு வாய்ப்பு கிடைத்தது. முதல் ஷூட்டிங்கில் ரொம்பவும் பதட்டமாக இருந்தது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முதல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, சொதப்பிடக்கூடாது என்று கவனமாக இருந்தேன். முதல்நாள் ஷூட் முடிந்தவுடன் நம்ம கௌதம் நமக்கு கிடைச்சிட்டாரு, நான் என்ன எதிர்பார்த்தேனோ அதை அவர் கரெக்டா பண்றாருனு கார்த்திக் நரேன் அவர் அஸிஸ்டண்ட்கிட்ட சொன்னாரு. அதை கேட்டதும் பதட்டம், தயக்கமெல்லாம் உடைந்து விட்டது. 

 

இயக்குநர் ஸ்ரீ கணேஷும் அவருக்கு என்ன வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். ஒரு காட்சியில் புருவம் தூக்கியிருக்க கூடாது என்றால் தூக்கியிருக்க கூடாது என்பதில் கவனமாக இருப்பார். குருதி ஆட்டம் படத்தில் அறிவு கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது ரொம்பவும் மகிழ்ச்சியைத் தந்தது. அந்தக் கதாபாத்திரத்தை ஸ்ரீ கணேஷ் சொன்னபோதே ரொம்பவும் பிடித்திருந்தது. ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று நினைத்து ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்”.