Advertisment

கார்த்திக் அரசியலுக்கு வந்தபோது கவுண்டமணி அடித்த கமன்ட்!

karthick

Advertisment

காமெடி நடிகர் கவுண்டமணிக்கு இன்று 80வது பிறந்தநாள். அவர் பிறந்தநாள் தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கவுண்டமணியின் காமெடி இன்றளவும் மீம்ஸ்கள் மூலம் ட்ரெண்டிலேயே உள்ளது. அந்த அளவு அவரின் ஆல் டைம் காமெடி நம் வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறியுள்ளது. மேலும் கவுண்டமணி சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் தன் அபாரமான கவுண்டர் காமெடிகளை அல்லி வீசிய தருணங்கள் பல உண்டு. அதில் ஒன்றான நடிகர் கார்த்திக் தன் அரசியல் பயணத்தின்போது கவுண்டமணி அடித்த கமன்ட் குறித்து நம்மிடம் பகிர்ந்தபோது....

''நான் அப்போ அரசியலில் இறங்கி முதல் சுற்றுப்பயணம் போயிட்டு வந்தேன். ஷூட்டிங்ல இருந்தேன். கவுண்டமணி பக்கத்துல இன்னொரு ஷூட்டிங்குக்காக வந்திருந்தார். பார்த்தப்போ டூர்லாம் எப்படியிருந்ததுனு கேட்டார். நல்லா இருந்துச்சுன்னு சொன்னேன். உடனே, என்னை ஒரு சைடா பாத்துகிட்டே, "எதுக்கு???"னு அவரு ஸ்டைல்ல தலையை ஆட்டிக்கிட்டே கேட்டார். செம்ம சிரிப்பு அப்போ. சில பேர் சொல்றாங்க 'அரசியலில் ரஜினிக்கும், கமலுக்கும் நீங்க சீனியர்'னு. அதெல்லாம் இல்லை, நான் ஸ்கூல் படிக்கும்போதிலிருந்து அவுங்க நடிப்பதைப் பார்த்திருக்கேன். அவுங்களுக்கு நான் சீனியரானு எனக்கே சிரிப்பு வரும்" என்றார்.

goundamani
இதையும் படியுங்கள்
Subscribe