Advertisment

'இளவரசே, இளவரசியே...' ஜெயம் ரவி, த்ரிஷாவை டேக் செய்து கார்த்தி ட்வீட்!

karthi

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்பட்டுவருகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, புதுச்சேரி, மத்தியப் பிரதேசம், ஊட்டி என பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தற்போது கவனம் செலுத்திவரும் படக்குழு, முதல் பாகத்தை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த கார்த்தி, தன்னுடைய காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ளார். இத்தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கார்த்தி, இளவரசி த்ரிஷா, நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது. இளவரசே ஜெயம் ரவி, என் பணியும் முடிந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவரும் ஜெயம் ரவி, ரகுமான் உள்ளிட்ட சில நடிகர்கள் தங்கள் காட்சிகளுக்கான படப்பிடிப்பை ஏற்கனவே நிறைவுசெய்துள்ள நிலையில், தற்போது நடிகர் கார்த்தியும் அப்பட்டியலில் இணைந்துள்ளார்.

ponniyin selvan actor karthi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe