/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/201_28.jpg)
மாமன்னன் படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை. இப்படம் அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நான்கு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி திவ்யா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்குகின்றனர்.
இப்படம் நாளை (22.08.2024) உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது, அதில் வெற்றி மாறன், ராம், மிஷ்கின், நெல்சன் உள்ளிட்ட பல இயக்குநர்களும் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், கவின் உள்ளிட்ட பல நடிகர்களும், நடிகைகளும் கலந்து கொண்டு இப்படத்தைப் பாராட்டி பேசினர். மேலும் அவ்விழாவில் பாரதிராஜா, மணிரத்னம் உள்ளிட்ட இயக்குநர்களும் சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட நடிகர்களும் காணொளி வாயிலாக இப்படத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இதற்கிடையே இப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்த பல திரைப்பிரபலங்கள், அவர்களின் சமூக வலைதளபக்கத்தில் பாராட்டி வருகின்றனர். இயக்குநர் பாலா மனமுடைந்து பாராட்டு தெரிவித்ததை மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் கார்த்தி தற்போது படக்குழுவைப் பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நம் பால்ய வருடங்களை அனைவராலும் நினைவு கூற முடியும். ஆனால் அதையே ஒரு திரைக்காவியமாய் படைத்து அதில் நம்மை உள்ளிழுத்து நமக்கு மிக நெருக்கமானவராய் ஆகிவிட்டார் மாரி. சந்தோஷின் இசையையும் தேனி ஈஸ்வரின் காட்சியையும் பயன்படுத்தி வாழ்க்கையின் நிதர்சனத்தையும் வலிகளையும் அழகாய் சொல்லியிருக்கிறார். நடிப்பு என்று எதையும் சொல்லி விட முடியாது அவ்வளவு யதார்த்தம். வாழை பார்த்தபின் மாரி செல்வராஜ் மீது பெரும் அன்பு உண்டாகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற தலைப்பில் படம் இயக்கி வருகிறார். அடுத்ததாக கார்த்தியை வைத்து அவர் படமெடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
நம் பால்ய வருடங்களை அனைவராலும் நினைவு கூற முடியும். ஆனால் அதையே ஒரு திரைக்காவியமாய் படைத்து அதில் நம்மை உள்ளிழுத்து நமக்கு மிக நெருக்கமானவராய் ஆகிவிட்டார் மாரி. சந்தோஷின் இசையையும் தேனி ஈஸ்வரின் காட்சியையும் பயன்படுத்தி வாழ்க்கையின் நிதர்சனத்தையும் வலிகளையும் அழகாய்… pic.twitter.com/QUievt8Uf1
— Karthi (@Karthi_Offl) August 22, 2024
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)