Advertisment

"நீங்கள் சொன்னதை எப்போதும் மறக்கமாட்டேன்" - பிரபல நடிகரின் வாழ்த்துக்கு கவின் நன்றி

karthi wishes kavin dada movie

Advertisment

அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாகியுள்ள 'டாடா' படம் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்திருந்தார். ஜென் மார்ட்டின் இசையமைத்திருந்தார்.

படத்தைப் பார்த்த கமல்ஹாசன்,தனுஷ், சூரி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களது பாராட்டுகளைப் படக்குழுவிற்குத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இயக்குநரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு நெகிழ்ச்சி சம்பவமாக தன் குழந்தையை தனியாக வளர்க்கும் தாய் ஒருவர், டாடா படம் பார்த்த பிறகு தனது கணவருடன் சேர இருப்பதாக இயக்குநரிடம் தெரிவித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், டாடா படக்குழுவிற்கு கார்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார். கார்த்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இறுதியாக டாடா படத்தைப் பார்த்தேன். என்ன ஒரு சிறந்த படம். இவ்வளவு நல்ல எழுத்து மற்றும் திரைப்பட உருவாக்கம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்" எனக் குறிப்பிட்டு படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.

Advertisment

இதற்கு நன்றி தெரிவித்து கவின் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், "ஐந்து நிமிடம் பேசியிருப்போம். நீங்கள் என்னிடம் சொன்ன எல்லாவற்றிலும், இந்த ஒரு விஷயத்தை மட்டுமே என்னால் எப்போதும் நினைவில் வைத்திருக்க முடியும், 'இந்தப் படத்தை நினைவில் வைத்திருப்பேன்' என்று நீங்கள் சொன்னது, எப்போதும் நான் மறக்கமாட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

actor karthi kavin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe