Skip to main content

"நீங்கள் சொன்னதை எப்போதும் மறக்கமாட்டேன்" - பிரபல நடிகரின் வாழ்த்துக்கு கவின் நன்றி

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

karthi wishes kavin dada movie

 

அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாகியுள்ள 'டாடா' படம் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்திருந்தார். ஜென் மார்ட்டின் இசையமைத்திருந்தார். 

 

படத்தைப் பார்த்த கமல்ஹாசன், தனுஷ், சூரி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களது பாராட்டுகளைப் படக்குழுவிற்குத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இயக்குநரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு நெகிழ்ச்சி சம்பவமாக தன் குழந்தையை தனியாக வளர்க்கும் தாய் ஒருவர், டாடா படம் பார்த்த பிறகு தனது கணவருடன் சேர இருப்பதாக இயக்குநரிடம் தெரிவித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்தது. 

 

இந்த நிலையில், டாடா படக்குழுவிற்கு கார்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார். கார்த்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இறுதியாக டாடா படத்தைப் பார்த்தேன். என்ன ஒரு சிறந்த படம். இவ்வளவு நல்ல எழுத்து மற்றும் திரைப்பட உருவாக்கம் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்" எனக் குறிப்பிட்டு படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.

 

இதற்கு நன்றி தெரிவித்து கவின் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், "ஐந்து நிமிடம் பேசியிருப்போம். நீங்கள் என்னிடம் சொன்ன எல்லாவற்றிலும், இந்த ஒரு விஷயத்தை மட்டுமே என்னால் எப்போதும் நினைவில் வைத்திருக்க முடியும், 'இந்தப் படத்தை நினைவில் வைத்திருப்பேன்' என்று நீங்கள் சொன்னது, எப்போதும் நான் மறக்கமாட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

படம் வெளியாவதற்கு முன்பே பரிசு - இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
star movie director elan got a plot from producer before a movie release

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுவரை படத்தின் 4 பாடல்கள் வெளியான நிலையில் அண்மையில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

star movie director elan got a plot from producer before a movie release

இந்த நிலையில் இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர் வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். இதனை இளன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, மகிழ்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ள எனது தயாரிப்பாளர் பெண்டேலா சாகருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் அவரை படம் பார்க்க அழைத்தபோது, ​​அவர் அதைப் பார்ப்பதற்கு முன்பு எனக்கு பரிசளிக்க வேண்டும் என்று கூறினார்” என பதிவிட்டுள்ளார்.

Next Story

பூஜையுடன் பணிகளைத் தொடங்கிய சங்க நிர்வாகிகள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nadigar sangam building works start again with pooja

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்த பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

nadigar sangam building works start again with pooja

இந்த நிலையில் இன்று சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் தொடங்கியது. பூஜை நடத்தி பணிகளை தொடங்கினார்கள் சங்க நிர்வாகிகள். இந்த பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.