/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/372_3.jpg)
சூர்யாவின் '2டி எண்டர்டெய்ன்மென்ட்' தயாரிப்பில் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக கார்த்தி நடித்துள்ள படம் 'விருமன்'. முத்தையா இயக்கும் இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் 'கஞ்சா பூவு கண்ணால' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் 'விருமன்' படத்தின் ட்ரைலர் மற்றும் மூன்று பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முன்பு வெளியான முத்தையா படங்களை போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில் ஆக்ஷன், காதல், காமெடி, எமோஷன் உள்ளிட்டவை கலந்து ஒரு பக்கா கமர்ஷியல் படம் போல் உருவாகியுள்ளது எனத்தெரிகிறது. மேலும் தற்போது வரை 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது விருமன் ட்ரைலர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)