Advertisment

"என்னாண்ணே... ஷாக் ஆகி நிக்கிற" - விருமன் அதகளம்

karthi in viruman sneak peek released

Advertisment

சூர்யாவின் '2டி எண்டர்டெய்ன்மென்ட்' தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'விருமன்'. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 'விருமன்' படத்தின் ஸ்னீக் பீக் தற்போது வெளியாகியுள்ளது. இதில் தன் அப்பா பிரகாஷ் ராஜை அடித்தவனை அழைத்து வந்து அவர் முன்பே அடித்தவனுக்கு மோதிரம் போடுகிறார் விருமன். மேலும் அதனை மேல தாளம் கரகாட்டத்தோடு கொண்டாடி அதகளம் செய்வது போல் வெளியாகியுள்ளது இந்த ஸ்னீக் பீக். இப்படம் நாளை (12.08.2022) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

muthaiya actor karthi viruman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe