'2டி எண்டர்டெய்ன்மென்ட்' சார்பாக சூர்யா தயாரித்து கார்த்தி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'விருமன்'. முத்தையா இயக்கியிருந்த இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். கிராமத்து பின்னணியில் குடும்பப் படமாக வெளியானஇப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சமீபத்தில் படக்குழு சக்சஸ் மீட் நடத்தியது.
இந்நிலையில் 'விருமன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற 11-ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இதனை அமேசான் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளது. இதனிடையே சமீபத்தில் யாரும் எதிர்பாராத விதமாக யூ-ட்யூபில் ஒரு தனியார் சேனலில் இப்படம் வெளியானது. இது தொடர்பாக படக்குழு யூ-ட்யூப் நிர்வாகத்துக்கு புகார் அளிக்க, பின்பு படம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.