Advertisment

'மதுர வீரன்' கார்த்தி - பாடகியாக களமிறங்கிய அதிதி ஷங்கர்

karthi viruman movie Madura Veeran song Promo Video  released

சூர்யாவின் '2டி எண்டர்டெய்ன்மென்ட்' தயாரிப்பில் இரண்டாவது முறையாக கார்த்தி நடித்துள்ள படம் 'விருமன்'. முத்தையா இயக்கும் இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் 'கஞ்சா பூவு கண்ணால' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் 'விருமன்' படத்தின் அடுத்த பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 'மதுர வீரன்' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இப்படத்தின் கதாநாயகி அதிதி ஷங்கர் பாடியுள்ளனர். இயக்குநர் ராஜூமுருகன் இப்பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார். தமிழில் முதல் முதலாக பாடியுள்ள அதிதி ஷங்கர், ஏற்கனவே தெலுங்கில் தமன் இசையில் 'ரோமியோ ஜூலியட்' என்ற பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யு/ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் விருமன் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் நாளை (03.08.2022) வெளியாகவுள்ளது.

Advertisment

aditi shankar actor karthi viruman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe