'கொடை சாஞ்சனே...கொம்பன் நான்தானே' - காதலை பகிரும் தேனும் விருமனும்

karthi viruman movie Madura Veeran lyric video released

சூர்யாவின் '2டி எண்டர்டெய்ன்மென்ட்' தயாரிப்பில் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக கார்த்தி நடித்துள்ள படம் 'விருமன்'. முத்தையா இயக்கும் இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் 'ட்ரைலர் மற்றும் ஆடியோ பாடல்கள் சமீபத்தில் மதுரையில் பிரமாண்ட நிகழ்ச்சி நடத்தி படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில் 'விருமன்' படத்தின் மதுர வீரன் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கார்த்திக்கும் அதிதி சங்கருக்கும் இடையேயான காதலை விவரிக்கும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. மேலும் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அதிதி ஷங்கர் குரலில் வெளியாகியுள்ள இப்பாடல் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

actor karthi viruman
இதையும் படியுங்கள்
Subscribe