karthi in vijay's thalapathy 67

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சர்தார்' படம்சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இசை சார்ந்த பணிகளை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொண்டிருந்தார். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. .

Advertisment

இந்நிலையில் 'சர்தார்' படத்தின் வெற்றியை முன்னிட்டு படக்குழு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.அப்போது 'கைதி 2' பற்றி கேட்கப்பட்ட கேள்விக்குஅடுத்த வருடம் படத்திற்கானபணிகளை ஆரம்பிக்க உள்ளதாக கார்த்தி தெரிவித்தார்.

Advertisment

லோகேஷ் கனகராஜ்தன் முந்தைய படத்தின் கதாபாத்திரங்களை அடுத்த படத்திலும் தொடர்ச்சியாககொண்டு வருகிறார். அந்த வகையில் கைதி படத்தில் டில்லி கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தி,லோகேஷ் அடுத்து இயக்கவுள்ள 'தளபதி 67' படத்தில் வருவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அந்த வகையில் 'தளபதி 67' படத்தில் நீங்கள் இணையவுள்ளீர்களா என்ற கேள்வி கார்த்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்தி, "அது தெரியவில்லை. அது எளிதும் கிடையாது. நாம் ஆசைப்படலாம். இரண்டு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் வேறு. அது தயாரிப்பாளர்கள் கையில் தான் இருக்கிறது" என்று பேசினார். ஏற்கனவே கமலின் 'விக்ரம்' படத்தில் கைதி படத்தின் கார்த்தி கதாபாத்திரம் குரல் வழியாக ஒரு காட்சியில் வந்தது குறிப்பிடத்தக்கது.