Advertisment

"இளவரசி..." - த்ரிஷாவை கலாய்த்த கார்த்தி

karthi tweet about trisha's ponniyin selvan poster

Advertisment

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பொன்னியின் செல்வன்'. 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இதனிடையே 'பொன்னியின் செல்வன்' படத்தின் கதாபாத்திரங்களின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஆகியோரின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது த்ரிஷா போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இளவரசி குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளதாக அறிவித்துள்ளது படக்குழு.

இந்நிலையில் த்ரிஷாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இளவரசி... ப்ளீஸ் உங்களின் லைவ் லொக்கேஷனை அனுப்புங்கள். உங்கள் அண்ணனின் ஓலையை ட்ராப் ஆஃப் பண்ணனும்" என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பொன்னியின் செல்வன் டீசர் நாளை(8.7.2022) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

actor karthi manirathnam ponniyin selvan trisha
இதையும் படியுங்கள்
Subscribe