karthi tweet about sandy master regarding viruman video song

Advertisment

'2டி எண்டர்டெய்ன்மென்ட்' சார்பாக சூர்யா தயாரித்து கார்த்தி நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'விருமன்'. முத்தையா இயக்கியிருந்த இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். கிராமத்து பின்னணியில் குடும்பப் படமாக வெளியாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு நேற்று சக்சஸ் மீட் நடத்தியது.

இதனிடையே 'விருமன்' படத்தின் 'வானம் கிடுகிடுங்க' வீடியோ பாடல் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் தற்போது கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இப்பாடலை பகிர்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "நடுராத்திரி மூணு மணிக்கெல்லாம் சம்மர்சால்ட் அடிக்கவுட்டியே சாண்டி மாஸ்டர். மன்னிக்கவேமாட்டேன். இதற்கு முன்பு இது போல் நான் செய்ததில்லை. இனி எல்லா ஊர் திருவிழாலயும் நம்ம பாட்டு கண்டிப்பா இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.