உயிரிழந்த சக கலைஞர் - உடைந்து நின்ற கார்த்தி!

karthi tribute to stunt trainer passed away in sardar 2 shooting

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படம் ‘சர்தார்’. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இசை சார்ந்த பணிகளை ஜி.வி.பிரகாஷ் குமார் மேற்கொண்டிருந்தார். ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.85 கோடிக்கு மேலாக வசூலித்தது.

இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. மேலும் கடந்த 15ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் முதல் பாகத்தில் நடித்த ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன், யூகி சேதி உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

சென்னையில் சாலிகிராமம் அருகே பிரசாத் ஸ்டூடியோவில், நடந்த படப்பிடிப்பின் போது கடந்த 16ஆம் தேதி சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் படப்பிடிப்பு தளத்தில் 20அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். கீழே விழுந்ததில் அவருக்கு மார்பில் அடிப்பட்டு, நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிழந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் திரையுலகிலனர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து சர்தார் 2 படக்குழு சார்பில், படத்தின் தயாரிப்பு நிறுவனம், சண்டை கலைஞர் ஏழுமலை காலமானதை ஒட்டி இரங்கல் தெரிவித்தது. இந்த நிலையில் கார்த்தி ஏழுமலை உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னை திருவொற்றியூரில் வைத்திருந்த ஏழுமலை உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய அவர், பின்பு ஏழுமலை குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

actor karthi tribute
இதையும் படியுங்கள்
Subscribe