karthi talk about ponniyin selvan movie

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

Advertisment

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் மணிரத்னம், கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் பேசிய கார்த்தி, “மேற்கத்திய படங்களில் விலங்குகளை நிறைய பார்க்கிறோம். ஆனால், தமிழில் மிக குறைவாகவே வருகிறது. ஆகையால், முக்கியமாக குதிரையையும், யானையையும் பார்ப்பதற்காகவே இப்படத்திற்கு வருவார்கள் என்று நானும் ஜெயம் ரவியும் பேசிக்கொண்டிருந்தோம். ஒரு குதிரையுடன் நாம் பழகினால் தான் அது நாம் சொல்லுவதை கேட்கும். எனக்கு ஏற்கனவே குதிரை பயணம் தெரியும். ஆனால், கொரோனா காலகட்டத்தில் ஒரே குதிரையை, எல்லா இடத்திற்கும் அழைத்துச் செல்ல முடியவில்லை. நான் கிட்ட தட்ட 6 முதல் 7 குதிரைகளுடன் பழகினேன். குதிரை தன் காதை பின்புறம் திருப்பிக் கொண்டால் நம் பேச்சை கேட்கிறது என்று அர்த்தம். முன் பக்கம் இருந்தால் அது நம்மை மதிக்கவில்லை என்று அர்த்தம். அதனால் நாங்கள், குதிரைகளுடன் பேசிக்கொண்டு இருந்தோம். செம்மண் குதிரை எப்போதும் மாட்டி விட்டு கொண்டே இருக்கும்.

Advertisment

உங்களுக்கு எப்படி இந்த கதாபாத்திரம் வந்தது என்ற கேள்வியை விட பயம் அதிகமாக இருந்தது. மணி சார் தான் நம்பிக்கை கொடுத்தார். ஆனாலும், குந்தவை, நந்தினி போன்ற பெண்கள் கதாபாத்திரங்களுடன் நடிக்கும் போது பயத்தோடும், பொறுப்போடும் தான் நடித்தேன். படப்பிடிப்பில் குதிரையில் இருந்து கீழே விழுந்து விட்டேன். ஆனால், மணி சார் எனக்கு தேவையான இடத்தில் அதையும் உபயோகிக்கப்படுத்திக் கொள்கிறேன் என்றார்.

ட்விட்டரில் வரும் கலந்துரையாடல் விளையாட்டாக ஆரம்பித்தது. ஆனால், அது இந்தளவு வைரலாகும் என்று நினைக்க வில்லை. நம் வரலாற்றை பேசப்படும் படம் இது. அந்த காலத்தில் ராஜராஜ சோழன் எப்படி இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியுமா? என்று மணி சாரிடம் கேட்டேன். அப்போது புகைப்படம் இல்லை ஆகையால் அவரை பலருக்கு தெரியாது என்றார். ஜெயராம் சார் மாதிரி உரிமையாக யாரும் பழக முடியாது. இப்படத்திற்காக உபயோகப்படுத்திய, நாங்கள் அணிந்துகொண்ட நகைகள் அனைத்தும் உண்மையானவை. அதை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது பெரிய சவாலாக இருந்தது. நகைகளின் எடை காது வலிக்கும்.

மணி சார் அந்த காலகட்டத்தை புரிந்து கொண்டு நடிக்க வேண்டும் என்று கூறினார். வந்தியத்தேவன் எதையும் யோசிக்காமல் உள்ளே செல்வான். பிரச்சனையில் மாட்டிக் கொள்வான். ஆனாலும், சுலபமாக வெளியே வந்து விடுவான். இது தான் இப்படத்தின் மூலம் நான் கற்றுக் கொண்டது” என்றார்.