Advertisment

விவசாயிகள் போராட்டம் : ஆதரவு தெரிவித்து கார்த்தி அறிக்கை!

karthi

நடிகர்கார்த்தி, உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பினைத் தொடங்கி, விவசாயிகளுக்கு உதவி வருகிறார். தற்போது, டெல்லியில் விவசாயிகள் மாபெரும்போராட்டத்தினை நடத்தி வரும் நிலையில், அவர் விவசாயிகளுக்கு ஆதரவாகஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

நடிகர்கார்த்தி அந்த அறிக்கையில், " நாளும்நம் பசி தீர்க்க, பாடுபடும்இந்தியநாட்டின் உழவர்கள், பெருந்திரளாக கடும்பனிப்பொழிவையும், கரோனாஅச்சத்தையும் பொருட்படுத்தாமல் ' உழவர்' என்ற ஒற்றை அடையாளத்துடன் போராடிவருகின்றனர். விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பும்பெரும்பங்கு என்ற வகையில்பெண்களும்பெருந்திரளாகப் பங்கெடுத்து போராடி வருவது வரலாறு காணாதநிகழ்வாகபிரமிப்பூட்டுகிறது" எனகூறியுள்ளார்.

Advertisment

நாளும், பொழுதும்பாடுபட்டால்தான் வாழ்க்கை என்ற நிலையில், தொலைதூரம் பயணித்து வந்து தீரத்துடன் போராடி வரும் செய்திகள், நம் ஒவ்வொருவர்உள்ளத்தையும் உலுக்குகிறது எனகுறிப்பிட்டுள்ளகார்த்தி, இயற்கை சீற்றங்கள், விளைபொருட்களுக்கு உரியவிலைஇல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் உழவர்சமூகம், வேளாண் சட்டங்களால் மேலும் பாதிப்படைவோம்எனகருதுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தங்கள் மண்ணில்தங்களுக்கிருக்கும் உரிமையும், தங்கள் விளைப்பொருட்களின் மேல் தங்களுக்கிருக்கும் சந்தை அதிகாரமும், பெரும் முதலாளிகளுக்கு இந்த சட்டங்களால் சென்றுவிடும்என்பதால் , இந்த புதியவேளாண் சட்டங்களை விலக்கிகொள்ள வேண்டும் என்பதுவிவசாயிகளின் வேண்டுகோளாகஉள்ளது எனகுறிப்பிட்டுள்ள அவர், "போராடும்விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்த்து, அவர்கள் கோரிக்கையைபரிசீலித்து, உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதைமத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதேஅனைத்து மக்களின்எதிர்பார்ப்பு! அதை அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டும்"எனவலியுறுத்தியுள்ளார்.

agaram actor karthi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe