karthi starring sardar movie shoot resumes

இயக்குநர்முத்தையா இயக்கும் 'விருமன்' படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி தற்போது இயக்குநர்மித்ரன் இயக்கும் 'சர்தார்' படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர்மித்ரன் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான 'இரும்புத்திரை', 'ஹீரோ', உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைதொடர்ந்து தற்போது கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தை இயக்கி வருகிறார்.கார்த்தியின் 'தேவ்' படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Advertisment

கடந்த ஆண்டே தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கரோனாகாரணங்களால் நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்தடுத்தபடங்களில் கவனம் செலுத்த தொடங்கியதால் சர்தார் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டு போனது. இந்நிலையில் சர்தார் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாககுறி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் இயக்குநர் மித்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனிடையே சர்தார் படத்தில் நடிக்கும் நடிகர் கார்த்தியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. வயதான மற்றும் இளமையான கெட்டப்பில் தோன்றியுள்ள கார்த்தியின் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Advertisment