Advertisment

“புத்தகத்தை படித்து பேப்பரே நனைந்துவிட்டது” - கார்த்தி

karthi speech in meyyazhagan pre pre release event

96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மெய்யழகன். சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து அர்விந்த் சுவாமியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடித்திருக்க ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 8ஆம் தேதி கோவையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கார்த்தி, அர்விந்த் சுவாமி, ஸ்ரீ திவ்யா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் கார்த்தி பேசுகையில், “96 படம் நம்ம எல்லோருக்குமே ரொம்ப ஸ்பெஷலான படம். அந்த படத்தின் இசை, உரையாடல் என எல்லாமே நல்லா இருக்கும். சின்னதா டயலாக் தப்பானாலும் அந்த படம் நல்லா இருந்திருக்காது. அந்தளவிற்கு பிரேம் நல்லா இயக்கியிருந்தார். அதன் பிறகு ஜெய் பீம் இயக்குநர் த.செ. ஞானவேல் ராஜா என்னிடம் வந்து 96 பட இயக்குநர் உங்களுக்கு ஒரு கதை வைத்துள்ளார். ஆனால் கொடுக்க பயப்படுகிறார் என்று சொன்னார். இதை கேட்டு அந்த கதை வேற யாருக்கும் போய்விட கூடாது என்பதற்காக நானே பிரேம் குமாருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டேன். பின்பு அவரை சந்தித்தபோது படிக்க சொல்லி ஒரு புத்தகம் கொடுத்தார்.

Advertisment

96 படத்திற்கு பிறகு வேறு எந்த படமும் பிரேம் பண்ணவில்லை. எப்படி தயாரிப்பாளர்கள் அவரை விட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை. பிரேம் எப்போதும் புகழ் பின்னாடி ஓடும் ஆள் கிடையாது. கலைக்காக இருக்கக்கூடிய அபூர்வ மனிதர், பொருட்காட்சியில் வைக்க வேண்டிய நபர். பிரேம் கொடுத்த புத்தகத்தை படிக்கும்போது 6 இடங்களில் கண்ணில் தண்ணீர் வந்து பேப்பர் நனைந்துவிட்டது. அந்த புத்தகத்தை படிக்கும்போது என்னையே நான் உணர்ந்தேன்.

இந்த படத்தை பார்த்தவர்கள் என்னிடம் எப்படிங்க இப்படி ஒரு படத்தை தேர்வு செய்தீர்கள் என்று கேட்டார்கள். இப்படி ஒரு கமர்ஷியலான படத்தை நான் ஏன் பண்ணக்கூடாது. வெறும் சண்டை மற்றும் காதல் காட்சிகள் மட்டுமே கமர்ஷியல் படம் கிடையாது. அந்தளவிற்கு அற்புதமான விஷயத்தை படம் பேசுகிறது. இந்த படம் கிடைத்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம். கைதி படம் போல் மெய்யழகன் படமும் இரவில்தான் எடுத்தோம். கைதி படத்தில் தினமும் சண்டை காட்சிகள் இருக்கும். ஆனால் மெய்யழகன் படத்தில் நல்லபடியாக ஒரு சண்டை காட்சிகளும் கிடையாது. அதனால் சண்டை காட்சிகளை எதிர்பார்த்து தியேட்டருக்கு வந்துராதீங்க” என்றார்.

actor karthi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe