karthi speech at meyyazhagan audio launch

96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் மெய்யழகன். சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்தில் கார்த்தியும் அர்விந்த் சுவாமியும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடித்திருக்க ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

Advertisment

இப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளதால் படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் உள்ள கொடிஸியா டி ஹாலில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கார்த்தி, ஸ்ரீ திவ்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கார்த்தி, இந்நிகழ்ச்சியை கோயம்புத்தூரில் வைப்பதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.

Advertisment

அப்போது கார்த்தி பேசுகையில், “என்னுடைய கல்யாணத்திற்கு பிறகு கோயம்புத்தூரில் எனக்கு நடக்கும் முதல் பெரிய நிகழ்ச்சி இதுதான். இந்த ஊருக்கும் எனக்கும் எந்த மாதிரியான சொந்தம் இருக்கிறதோ, அந்த மாதிரியான விஷயத்தை மெய்யழகன் படமும் பேசும். அதனால் இந்த ஊரில் நிகழ்ச்சி நடத்தினால்தான் அர்த்தமுள்ளதாக இருக்கும். எங்களின் வேர்கள், உறவுகள் எல்லாம் இங்குதான் இருக்கிறார்கள், அதனால்தான் படத்தின் நிகழ்ச்சியை இங்கு நடத்த வேண்டும் என்ற ஆசை” என்று செண்டிமெண்டாக விளக்கம் கொடுத்தார். இதனிடையே படத்தின் அனைத்து பாடல்களும் யூ-ட்யூபில் வெளியாகியுள்ளது.