கணம் படத்திற்காக குரல் கொடுத்த கார்த்தி

karthi singing Maaripocho Song from kanam movie in you tubr trending list

'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கணம்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் சர்வானாந்த கதாநாயகனாக நடிக்க அவருக்கு அம்மாவாக நடிகை அமலா நடித்துள்ளார். 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில்கதாநாயகியாக ரீத்து வர்மா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

இந்நிலையில் 'கணம்' படத்தின் மூன்றாவது பாடல் 'மாரிபோச்சோ' பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள இப்பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. தெலுங்கில் 'ஒகே ஒக ஜீவிதம்' என்ற தலைப்பில் இப்படம் வெளியாகிறது.

actor karthi kanam movie
இதையும் படியுங்கள்
Subscribe