மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சர்தார்'. பிரின்ஸ் பிக்சர்ஸ்தயாரிப்பில் உருவானஇப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இசை சார்ந்தபணிகளை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொண்டுள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டுநாளை (21.10.2022) தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிற நிலையில்,படத்தைப் பற்றி இயக்குநர் மித்ரன், "கார்த்தியின் டபுள் ஆக்சன், ராஷி கண்ணா, ரஜிஷா விஜயனின் கலர்புல் காம்போ, ரசிகர்களை வெகுவாக கவரும்" என்றார். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாளை வெளியாகவுள்ள இப்படத்திற்கு அதிக அளவிலான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.